indian2

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 திரைப்படம் பற்றிய முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் திரைப்படம் இந்தியன் 2. இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது. பல தடங்கள்களுக்கு பின் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது வேகம் பெற்றுள்ளது. இப்படத்தில் கமல்ஹாசன், சித்தார்த், காஜல் அகவர்வால், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.

முதல் கட்டப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வந்தது. தற்போது அடுத்தகட்ட பிடிப்பிற்காக படக்குழு போபாலுக்கு செல்ல உள்ளது. அங்கு ஒரு பிரம்மாண்டமான சண்டை காட்சியை ஷங்கர் படம்பிடிக்க திட்டமிட்டுள்ளார்.

அந்த சண்டை காட்சியை பீட்டர் ஹெய்ன் வடிவமைக்கவுள்ளார். சுமார் 2 ஆயிரம் துணைநடிகர்கள் மற்றும் சண்டை நடிகர்கள் இதில் பங்கேற்கவுள்ளனர். இந்த ஒரே ஒரு சண்டைக்காட்சிக்காக மட்டும் ரூ.40 கோடி செலவு செய்யப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.