Indian 2 Latest Update

நீண்ட நாள் ஆசை நிறைவேறியது.. கமலுடன் இந்தியன் 2-ல் இணைந்த முக்கிய நடிகர்.!

Indian 2 Latest Update : இயக்குனர்களின் இமயம் கே. பாலசந்திரன் அவர்களின் அறிமுகத்தில் முதல் முதலாக தமிழ் சினிமாவிற்குள் நுழைந்தவர் நடிகர் விவேக். இவர் இது வரையில் ரஜினி, விஜய், அஜித் மற்றும் சூரியா போன்ற முன்னணி நடிகர்கள் அனைவருடனும் இணைந்து நடித்து விட்டார்.

நல்ல நடிப்பு திறமை மற்றும் பொதுநலம் கொண்ட மனது என எல்லா விதத்திலும் விவேக் சிறந்தவர். மேலும் இவர் தனது நடிப்பிற்காக பல விருதுகளை பெற்று உள்ளார்.

கிட்டத்தட்ட தமிழ் சினிமாவில் மூத்த மற்றும் இளம் கதாநாயகர்களுடன் இணைந்து நடிக்க வாய்ப்பு கிடைத்த விவேக்கிற்கு உலக நாயகன் கமலுடன் மட்டும் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

பத்ரி படத்திற்கு மீண்டும் இணையும் கூட்டணி – தளபதியின் அடுத்தப் படம் குறித்த அப்டேட்.!

கமலுடன் இணைந்து நடிக்க வாய்ப்பு கிடைக்காததை பற்றி விவேக் பொது மேடையில் அவரின் பாணியில் தெரிவித்தார். மேலும் கமலுடன் இணைந்து நடிக்க தனது விருப்பத்தையும் தெரிவித்தார். அந்த விருப்பம் தற்போது நடக்க உள்ளது.

தமிழ் சினிமாவில் பிரமாண்டம் என்றால் இயக்குனர் சங்கர் நினைவிற்கு வருவார். சங்கர் மற்றும் கமல் கூட்டணியில் முன்னதாக உருவாகி வெற்றி பெற்ற படம் “இந்தியன்”. தற்போது அதன் இரண்டாம் பாகம் “இந்தியன்-2” தயாராகி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.