Indian 2 Heroine

Indian 2 Heroine : இந்தியன் 2 படத்தின் நாயகி நான் தான் என்பது போல பிரபல தென்னிந்திய நாயகி ஒருவர் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் 1996-ம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த படம் இந்தியன்.

உலக சினிமாவையே திரும்பி பார்க்க வைத்த இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாக உள்ளது.

இரண்டாம் பாகத்தையும் ஷங்கர் இயக்க கமல்ஹாசனே நடிக்க உள்ளார். வரும் டிசம்பர் 14-ம் தேதி முதல் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.

இப்படத்தில் நாயகியாக நயன்தாரா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. அதன் பின்னர் காஜல் அகர்வால் தான் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் காஜல் அகர்வால் தெலுங்குவில் நடித்துள்ள கவச்சம் படத்தின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அடுத்தடுத்த படங்கள் என்னென்ன என கேள்வி எழுப்பியுள்ளனர்.

அதற்கு காஜல் கமல்ஹாசனுடன் ஒரு படத்தில் நடிக்க உள்ளேன் என கூறியுள்ளார். இதன் மூலம் இந்தியன் 2 நாயகி இவர் தான் என்பது உறுதியாகி உள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.