இந்தியன் 2 படத்திலிருந்து காஜல் அகர்வால் கர்ப்பமாக இருப்பதன் காரணமாக விலகிக் கொண்டதாக கூறப்படுகிறது.

Indian 2 Heroine Change Update : தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் உலக நாயகன் கமல்ஹாசன். பல வருடங்களுக்கு பிறகு பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் இவர் நடிக்கும் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வந்தது. படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து, கரோனா வைரஸ் பரவல், தயாரிப்பு நிறுவனத்திற்கு சங்கருக்கும் இடையேயான பிரச்சனை என பல்வேறு காரணங்களால் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து தள்ளிப் போய் வந்தது.

நம்பினோர் கெடுவதில்லை.! (சிறுகதை)

ஷங்கரும் இந்தியில் ஒரு படத்தை இயக்க இருப்பதாக தெலுங்கில் ராம்சரண்-ஐ வைத்து ஒரு படத்தை இயக்க இருப்பதாக அறிவிப்பு வெளியானது. இதனால் இந்தியன் 2 தயாரிப்பு நிறுவனம் சங்கருக்கு அழுத்தம் கொடுத்தால் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என சொல்லப்பட்டது.

இந்த மழை எப்போ விடும் Sir-னு என்னை கேக்குறாங்க – Shock-ஆன நீயா நானா Gopinath..! | Chennai Rain | HD

ஆனால் தற்போது புதிய சிக்கல் உருவாகியுள்ளது. அதாவது இந்தியன் டூ படத்திலிருந்து காஜல் அகர்வால் கர்ப்பமாக இருப்பதன் காரணமாக விலகிக் கொண்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர் நடித்து வரும் படங்களில் அவருக்கு பதிலாக வேறு நடிகைகள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.

இந்தியன் 2 படத்திலும் வேறு ஒரு நடிகையை தேர்வு செய்து அவருக்கான படப்பிடிப்பு ஆரம்பத்திலிருந்து மீண்டும் நடைபெறும் என சொல்லப்படுகிறது. ஆனால் காஜல் அகர்வாலுக்கு பதிலாக நடிக்கப் போவது யார் என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை. இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.