Indian 2

Indian 2 Details : கமல்ஹாசனால் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளன. இது குறித்த செய்திகள் தற்போது வலம் வரத் தொடங்கியுள்ளன.

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை லைகா நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.

ஏற்கனவே பட்ஜெட் பிரச்சனையால் இப்படத்தின் படப்பிப்புகள் பாதியில் நின்றது. அதன் பின்னர் மீண்டும் தொடங்கியது. சில நாட்கள் நடந்ததும் கமல்ஹாசனுக்கு மேக்கப் செட்டாகவில்லை என மீண்டும் தடைபட்டது.

அதன் பின்னர் பிரம்மாண்ட செட்டுகளுடன் படப்பிடிப்புகள் தொடங்கி நடந்து வந்த நிலையில் மீண்டும் கமல்ஹாசனால் இப்படத்தின் படப்பிடிப்புகள் தள்ளி போயுள்ளன.

இதற்கு பாராளுமன்ற தேர்தல் தான் காரணம் எனவும் கூறப்படுகிறது. கமல்ஹாசனின் மக்கள் நீதி மன்றம் 40 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளது. கமல்ஹாசனும் போட்டியிடுகிறார்.

இதனால் தேர்தல் முடிந்து முடிவுகள் வெளியாகும் வரை படப்பிடிப்புகளை தள்ளி போடுமாறு கமல்ஹாசன் ஷங்கருக்கு வேண்டுகோள் வைத்துள்ளார். இதனால் தற்போது படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.