இந்தியன் 2 படப்பிடிப்பின் விபத்தில் கிருஷ்ணா என்பவர் உட்பட மூன்று பேர் பலியாகியுள்ளனர். தற்போது யார் இந்த கிருஷ்ணா என்பது பற்றி கேள்வி அதிகம் எழுந்துள்ளது.

சென்னையில் இந்தியன் 2 படத்திற்காக செட் அமைக்கப்பட்டு வந்த நிலையில் நேற்றிரவு ஏற்பட்ட விபத்தில் கிருஷ்ணா, சந்திரன், மது என மூவர் பலியாகினர்.

சந்திரன் உதவி கலை இயக்குனர், மது தயாரிப்பு நிறுவனத்தை சேர்ந்தவர். கிருஷ்ணா என்பவர் ஷங்கரின் உதவி இயக்குனர்.

இவர் இந்தியன் 2 மட்டுமில்லாமல் அஜித் உட்பட பல திரையுலக பிரபலங்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். இவருடைய மறைவிற்கு பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

இவர் பிரபல கார்ட்டூனிஸ்ட் மதன் அவர்களின் மாப்பிள்ளை எனவும் தகவல் பரவி வருகிறது, ஆனால் அது அவர் இல்லை எனவும் கூறப்பட்டு வருகிறது.