Indian 2 Shooting Spot Accident
இந்தியன் 2 படப்பிடிப்பில் நடந்த கோர விபத்தில் கமல், காஜல் அகர்வால் ஆகியோர் வெறும் 10 நொடியில் உயிர் தப்பியுள்ளனர்.

Indian 2 Accident : உலக நாயகன் கமல்ஹாசன், காஜல் அகர்வால் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படத்திற்கான செட் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஏற்பட்ட கோர விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். 10 பேர் படுகாயமடைந்தனர்.

தற்போது இந்த விபத்து பற்றி காஸ்ட்யூம் டிசைனர் பதிவிட்டுள்ள டீவீட்டில் 10 நொடி முன்னர் தான் நான், காஜல் அகர்வால் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் அவ்விடத்தில் இருந்து கிளம்பி சென்றோம். அது நாங்கள் அமரும் இடம் தான் என கூறி பதிவிட்டுள்ளார்.

அதே போல் உலக நாயகன் கமல்ஹாசன் தன்னுடைய தட்விட்டர் பக்கத்தில் எத்தனையோ விபத்துக்களை சந்தித்து, கடந்திருந்தாலும் இன்றைய விபத்து மிகக் கொடூரமானது. மூன்று சகாக்களை இழந்து நிற்கிறேன்.எனது வலியை விட அவர்களை இழந்த குடும்பத்தினரின் துயரம் பன்மடங்கு இருக்கும். அவர்களில் ஒருவனாக அவர்களின் துயரத்தில் பங்கேற்கிறேன்.அவர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள் என குறிப்பிட்டுள்ளார்.

இன்னொரு பதிவில் மருத்துவமனையில் விபத்தில் சிக்கியவர்களை பார்த்து மருத்துவர்களிடம் பேசியுள்ளேன்.

முதலுதவி வழங்கப்பட்டு உரிய சிகிச்சைக்கான வேலைகள் நடக்கிறது.

இவர்கள் விரைவாக உடல் நலம் பெற்றிடுவார்கள் என்ற நம்பிக்கையுடனே இந்த இரவு விடியட்டும்.என பதிவிட்டுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.