India won
India won

India won – இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் போட்டி தொடரில் விளையாடி வருகிறது.

இதில் மவுண்ட் மாங்கானுயில் நடந்த 2-வது ஆட்டத்தில் 90 ரன்கள் வித்தியாசத்திலும் இந்திய அணி வெற்றி பெற்றது.

இரு அணிகளுகு இடையே 3வது ஒரு நாள் போட்டி நேற்று நடைபெற்றது.

நியூசிலாந்து  அணி ‘டாஸ்’ வென்று பேட்டிங்கை தேர்வு செய்ததது. இந்திய வீரர்களின் சிறப்பான பந்து வீச்சால் நியூசிலாந்து அணி ரன் எடுப்பதற்கு சிரமபட்டது. 59 ரன் எடுப்பதற்குள் அந்த அணி 3 விக்கெட் இழந்தது.

இதனை தொடர்ந்து டெய்லர் – டாம் லாதம் ஜோடி விக்கெட் சரிவை தடுத்து பொறுமையுடன் விளையாடியது. இதனால், அந்த அணி 25.5 ஓவரில் 100 ரன்னை எடுத்தது.

சதத்தை நெருங்கிய டெய்லர், 93 ரன்னில் ஆட்டம் இழந்தார். பின்னர் எஞ்சிய விக்கெட்டுகளும் அடுத்தடுத்து, இழுக்கவே நியூசிலாந்து அணி, 49- வது ஓவர் முடிவில் 243 ரன்னில் ‘ஆல் அவுட்’ ஆனது.

244 ரன்கள் என்ற இலக்குடன் களறமிறங்கிய இந்திய அணிக்கு ரோகித் சர்மா, தவானின் தொடக்கம் சிறப்பாக இருந்தது. அதிரடியாக ஆடிய தவான், 27 பந்தில் 28 ரன்கள் சேர்த்து 6 பவுண்டரி விளாசி ஆட்டமிழந்தார். 2-வது விக்கெட்டுக்கு இணைந்த ரோகித் சர்மா – விராட் கோலி ஜோடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தியது.

ரோகித் சர்மா 62 ரன்களிலும், விராட் கோலி 60 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அப்போது அணியின் ஸ்கோர், 3 விக்கெட் இழப்பிற்கு 168 என்ற நிலையில் இருந்தது.

7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ராயுடு 40 ரன்களுடனும், தினேஷ் கார்த்திக் 38 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இந்த வெற்றியின் மூலம், 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here