India Won The Test Match
தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. டெஸ்ட் தொடரில் இந்திய அணி அபார வெற்றி பெற்று உள்ளது.
India Won The Test Match : டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில்  முடிந்தது. அதன் பின்னர் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விசாகப்பட்டினத்தில் நடந்தது.
முதல் டெஸ்ட் போட்டியில் 203 ரன்  வித்தியாசத்திலும், புனேவில் நடந்த 2-வது போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 137 ரன் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்று  தொடரை கைப்பற்றிவிட்டது.
3-வது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் நடைபெற்றது. முதல் இன்னிங்சில் இந்திய அணி 497 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.
தென்  ஆப்பிரிக்க அணி 162 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி பாலோ-ஆன் பெற்றது.
மீண்டும் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி 2வது  இன்னிங்சில் 133 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இதனால் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 202 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.  தொடரையும் 3-0 என முழுமையாக கைப்பற்றியது.
இந்த தொடரின் ஆட்ட நாயகன், தொடர் நாயகன் இரண்டுமே ரோஹித் சர்மா தான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here