India Win The Match :
இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் உலகக்கோப்பை தொடரின் 34-வது லீக் ஆட்டம் மான்செஸ்டர் ஓல்டு டிராபோர்டில் நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.
ரோகித் சர்மா 18 ரன்னிலும், லோகேஷ் ராகுல் 48 ரன்னிலும், விஜய் சங்கர் (14), கேதர் ஜாதவ் (7) என சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
மும்பையின் பந்து வீச்சில் சுருண்டது ஐதராபாத் – 40 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி!
அரைசதம் அடித்த விராட் கோலி 82 பந்தில் 72 ரன்கள் எடுத்த நிலையில் ஹோல்டர் பந்தில் ஆட்டமிழந்தார். ஒருபுறம் தோனி நிதானமாக விளையாடினாலும், மறுமுனையில் ஹர்திக் பாண்டியா 38 பந்தில் 46 ரன்கள் சேர்க்க இந்தியா 250 ரன்னைத் தாண்டியது.
இறுதியில், இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 268 ரன்கள் சேர்த்துள்ளது. தோனி 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
பிறகு வெஸ்ட் இண்டீஸ் அணி 269 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. முதலில் இருந்தே இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசினர். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணியினர் ரன்கள் எடுக்க முடியாமல் திகைத்து இருந்தனர்.
அந்த அணியில் அதிகபட்சமாக சுனில் அம்ப்ரிஸ் 31 ரன்னும், நிகோலஸ் பூரன் 28 ரன்னும் எடுத்தனர். மற்ற வீரர்கள் குறைந்த விரைவில் வெளியேறினர்.
இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 34.2 ஓவரில் 143 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து, இந்தியா 125 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்தியா சார்பில் முகமது ஷமி 4 விக்கெட்டும், பும்ரா, சஹல் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதுவரை தோல்வியை சந்திக்காமல் இருக்கும் ஒரே அணி இந்திய அணி மட்டுமே.