India win 5th ODI
India win 5th ODI

India win 5th ODI – இந்தியா நியூசிலாந்து அணிகள் 5 நாள் ஒருநாள் போட்டி கொண்ட தொடர் நடந்து முடிந்து உள்ளது. இதில் இந்தியா 4-1 என தொடரை வென்று உள்ளது.

இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையே கடைசி ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இந்நிலையில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்ய முடிவெடுத்து, தனது ஆட்டத்தை தொடங்கியது.

தொடக்க வீரர்களாக தவான் மற்றும் ரோகித் களமிறங்கினார்கள். ஆனால் தொடக்கம் எதிர்பார்த்த அளவிற்கு இந்திய அணிக்கு சாதகமாக அமையவில்லை.

தவான் மற்றும் சர்மா இருவரும் ஒற்றை இலக்க எண்ணில் வெளியேறினார்கள்.

அடுத்து களமிறங்கிய ராயுடு, மற்றும் சங்கர் ஆகியோர் சிறப்பாக விளையாடினர். ராயுடு 90 ரன்கள் எடுத்து வெளியேறினார். சங்கர் 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து களமிறங்கிய தோனி 1 மட்டுமே எடுத்து வெளியேறினார். பாண்டியா 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் இந்தியா 252 ரன்கள் எடுத்து ஆல் அவுடானது.

253 இலக்காக கொண்டு களமிறங்கிய நியூசிலாந்து அணியில் பெரிதாக யாரும் ரன்கள் எடுக்கவில்லை. இந்திய அணியின் பந்துவீச்சில் ரன் சேர்க்க பெரிதும் சிரமபட்டது நியூசிலாந்து அணி.

இந்திய அணியின் ஷமி, சஹால்,பாண்டியா ஆகியோர் சிறப்பாக பந்து வீசினார்கள். இதன் மூலம் இந்தியா 4-1 என்ற கணக்கில் தொடரை வெற்றி பெற்று உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here