India vs West Indies Highlights | India vs West Indies, 1st Test Day 1 in Antigua Highlights, India take on West Indies in the first Test at Antigua.
India vs West Indies Highlights

India vs West Indies Highlights – வெஸ்ட் இண்டீசுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.

இதன் முதலாவது டெஸ்ட் ஆன்டிகுவாவில் நேற்று தொடங்கியது. இந்த போட்டி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்டது என்பதால் முக்கியத்துவம் பெறுகிறது.

மழை மற்றும் ஆடுகளம் ஈரப்பதம் காரணமாக ஆட்டம் 15 நிமிடங்கள் தாமதமாக தொடங்கியது. இதில் ‘டாஸ்’ ஜெயித்த வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஜாசன் ஹோல்டர் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் தொடர் – மழையால் ஆட்டம் நிறுத்தம்

இதையடுத்து லோகேஷ் ராகுலும், அகர்வாலும் இந்தியாவின் இன்னிங்சை தொடங்கினர்.

வேகப்பந்து வீச்சுக்கு உகந்த இந்த ஆடுகளத்தில் பந்து நன்கு ‘பவுன்ஸ்’ ஆனது. வெஸ்ட் இண்டீசின் புயல்வேக தாக்குதலில் இந்திய வீரர்கள் வெகுவாக தடுமாறினர்.

மயங்க் அகர்வாலும் (5 ரன்), அடுத்து வந்த ‘தூண்’ புஜாராவும் (2 ரன்) ஒரே மாதிரி கெமார் ரோச்சின் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் ஷாய் ஹோப்பிடம் கேட்ச் ஆனார்கள். பயிற்சி ஆட்டத்தில் சதம் விளாசிய புஜாரா, முக்கியமான இந்த டெஸ்டில் சோபிக்க தவறி விட்டார்.

அடுத்து களம் இறங்கிய வீரர்கள் குறைந்த ரன்களில் வெளியேறினார்கள். அதை தொடர்ந்து லோகேஷ் ராகுல் ஆட்டத்தின் 34.2வது ஓவரில் 44 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்.

தர்பார் ரஜினியை சந்தித்த காப்பான் வில்லன் – வைரலாகும் புகைப்படம் உள்ளே!

அவரை தொடர்ந்து களம் இறங்கிய இந்திய அணி வீரர் ரிஷப் பந்த், ரஹானேவுடன் ஜோடி சேர்ந்து ஆடினார்.

இருவரும் இணைந்து இந்திய அணியின் ரன் விகிதத்தை உயர்த்திய நிலையில் ஆட்டத்தின் 59.4 ஓவரில் துணை கேப்டன் ரஹானே 81 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கேப்ரியல் பந்து வீச்சில் அவுட்டானார்.

அடுத்து வந்து களம் இறங்கிய ஜடேஜா 3 ரன்களுடனும், ரிஷப் பந்த் 20 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.

இதன் மூலம் 68.5 ஓவர் முடிவில் இந்திய அணி 6 விக்கெட்களை இழந்து 203 ரன்கள் எடுத்திருந்தது.