India vs West Indies : Sports News, World Cup 2019, Latest Sports News, World Cup Match, India, Sports, Latest News, ICC World Cup 2019

India vs West Indies :

இந்திய அணி 6-வது ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீசை இன்று எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் மான்செஸ்டரில் உள்ள ஓல்டுடிரா போர்ட் மைதானத்தில் இந்திய நேரடிப்படி மாலை 3 மணிக்கு தொடங்குகிறது.

இந்திய அணியின் அதிரடி தொடரும் என்று ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

இன்னும் இந்திய அணி 4 ஆட்டத்தில் விளையாட வேண்டி உள்ளது. இதில் இரண்டில் வென்றால்தான் அரை இறுதிக்குள் நுழைய முடியும். இதனால் வெஸ்ட்இண்டீசை வீழ்த்தி 5-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது நமது இந்திய அணி.

பலவீனமான ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இந்திய வீரர்கள் தட்டு தடுமாறி தான் வெற்றியை பெற்றனர். ஆப்கானிஸ்தான் கடுமையான சவாலை கொடுத்தது. இதனால் இந்திய அணி வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக மிகவும் கவனமாகவே விளையாடும்.

நமது வீட்டில் ஐஸ்வர்யம் தரும் கோமாதா வழிபாடு, பற்றி தெரிந்து கொள்வோமா?.

முதல் 3 வரிசை வீரர்கள் ரோகித்சர்மா, ராகுல், விராட்கோலி மிகப் பெரிய ஆட்டத்தை வெளிப்படுத்தாவிட்டால் ரன் குவிக்க இயலாது என்பதை கடந்த போட்டியில் பார்த்தோம்.

2 சதம் அடித்த ரோகித்சர்மா ஆப்கானிஸ்தானுககு எதிரான ஆட்டத்தில் ஏமாற்றம் அளித்தார். இதனால் அவர் வெஸ்ட்இண்டீசுக்கு எதிராக மீண்டும் திறமையை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்ப்பு இருக்கிறது.

கேப்டன் விராட்கோலியும் பேட்டிங்கில் நல்ல நிலையில் உள்ளார். அவர் 3 அரை சதத்துடன் 244 ரன்கள் எடுத்துள்ளார். மிடில் ஆடர் வரிசையில் அதிரடியான ஆட்டம் அவசியமானது.

கடந்த ஆட்டத்தில் தோனி மற்றும் கேதர்யாதவும் ஆமை வேகத்தில் ஆடினார்கள். அவர்கள் அதில் இருந்து வெளி வந்து தங்களின் அதிரடியை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். மறு பக்கத்தில் இந்தியாவை வீழ்த்தி 2-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் வெஸ்ட்இண்டீஸ் உள்ளது.

பொள்ளாச்சி வழக்கு சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவு!

நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் வெஸ்ட்இண்டீஸ் மயிரிழையில் வெற்றியை தவற விட்டது. இதனால் அந்த அணி இந்தியாவுக்கு எதிராக சவால் விடும் வகையில் விளையாடும் என்று எதிர்பார்க்கிறது.

வெஸ்ட்இண்டீஸ் அணியில் கிரிஸ் கெய்ல், ஹெட்மயர், ஹோப், பிராத்வெயிட் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.

இரு அணிகளும் கடைசியாக கடந்த ஆண்டு நவம்பர் 1-ந்தேதி திருவனந்தபுரத்தில் மோதிய ஆட்டத்தில் இந்தியா 9 விக்கெட்டில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.