India vs West Indies 2nd Test : Virat kholi, Jasprit Bumrah, jadeja, Sports News, World Cup 2019, Latest Sports News, India, Sports

India vs West Indies 2nd Test :

இந்தியா – வெஸ்ட்இண்டீஸ் அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஜமைக்காவில் உள்ள கிங்ஸ்டனில் நடைபெற்றது.  299 ரன்கள் முன்னிலையில் இந்திய அணி 2-வது இன்னிங்சை விளையாடியது.

57 ரன் எடுப்பதற்குள் 4 விக்கெட்டை இழந்து இந்தியா திணறியது. அகர்வால் 4 ரன்னிலும், ராகுல் 6 ரன்னிலும், விராட்கோலி ரன் எதுவும் எடுக்காமலும் ரோச் பந்து வீச்சில் ஆட்டம் இழைத்தனர்.

புஜாரா 27 ரன்னில் ஹோல்டர் பந்தில் ஆட்டம் இழந்தார். 5-வது விக்கெட்டான ரகானே – விகாரி ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டது. விகாரி 67 பந்தில் 8 பவுண்டரியுடன் 50 ரன்னையும், ரகானே 91 பந்தில் 7 பவுண்டரி, 1 சிக்சருடன் 50 ரன்னையும் தொட்டனர்.

ரகானே 19-வது அரை சதத்தையும், விகாரி 3-வது அரை சதத்தையும் பதிவு செய்தனர்.

இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 168 ரன் எடுத்து இருந்த போது ஆட்டத்தை ‘டிக்ளேர்’ செய்தது. இதனால் வெஸ்ட்இண்டீசுக்கு 468 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

ரகானே 109 பந்தில் 64 ரன்னும், (8 பவுண்டரி, 1 சிக்சர்), விகாரி 76 பந்தில் 53 ரன்னும் (8பவுண்டரி) எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். கேமர் ரோச் 3 விக்கெட்டும் ஹோல்டர் 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

55 ஆண்டுகளுக்கு பின் பாகிஸ்தான் செல்லும் இந்திய அணி!

468 ரன் இலக்குடன் விளையாடிய வெஸ்ட்இண்டீஸ் 37 ரன் எடுப்பதற்குள் தொடக்க வீரர்கள் ஆட்டம் இழந்தனர்.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2வது தொடரில் இந்திய அணி 257 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஆன்டிகுவாவில் நடந்த முதல் டெஸ்டில் 318 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது. இதனால் இந்தியா 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

இந்த டெஸ்டிலும் வெற்றி பெறுவதன் மூலம் இந்தியா ஐ.சி.சி. டெஸ்ட் சாம்பியன் ஷிப் போட்டியில் 120 புள்ளிகளை பெற்றது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.