India vs West Indies 2019 | India tour of West Indies, 2019 schedule
India vs West Indies 2019

India vs West Indies 2019 – உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை இந்திய அணி இன்று துவக்குகிறது. முதல் சவாலில் விண்டீஸ் அணியை சந்திக்கிறது.

விண்டீஸ் சென்றுள்ள இந்திய அணி இரண்டு போட்டிகள் கொண்ட உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்கிறது.

இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் இன்று ஆன்டிகுவாவில் உள்ள சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் துவங்குகிறது.

கோஹ்லி தலைமையிலான இந்திய அணி, சமீபத்தில் இங்கு நடந்த ‘டுவென்டி-20’ (3-0), ஒருநாள் (2-0) தொடர்களை வென்றது.

ஒலிம்பிக் தகுதி சுற்று ஹாக்கி – இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா வெற்றி!

இந்த வெற்றி டெஸ்ட் தொடரிலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அணிக்கு மயங்க் அகர்வால், லோகேஷ் ராகுல் ஜோடி துவக்கம் தரும் என்பதால் விஹாரிக்கு இடம் கிடைக்காது.

‘மிடில் ஆர்டரில்’ பயிற்சியில் சதம் விளாசிய புஜாரா நம்பிக்கை தர காத்திருக்கிறார்.

‘டுவென்டி-20’ (106), ஒருநாள் (234) தொடரில் மொத்தம் 340 ரன் விளாசிய கேப்டன் கோஹ்லி, மீண்டும் மிரட்டலாம்.

தெலுங்கு மொழியில் அறிமுகமாகும் சிவகார்த்திகேயன்..!

‘வேகத்துக்கு’ கைகொடுக்கும் என நம்பப்படுவதால் பும்ரா, முகமது ஷமி, இஷாந்த் சர்மாவுடன், உமேஷ் யாதவ் என நான்கு ‘வேகங்கள்’ களமிறங்கலாம்.

இதனால் சுழலில் அஷ்வின் அல்லது குல்தீப் என இருவரில் ஒருவருக்கு மட்டும் இடம் கிடைக்கும். ‘ஆல் ரவுண்டர்’ இடத்தில் ஜடேஜா வருவாரா என இன்று தான் தெரியவரும்.

முதல் டெஸ்ட் மழையால் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. போட்டி நடக்கும் ஆன்டிகுவாவில் அடுத்த ஐந்து நாட்களில் மழை வர 81 சதவீதம் வாய்ப்புள்ளது.

ஆக., 2ல் அதிகபட்சம் 88 சதவீதம் வரை மழை வரலாம் என்பதால் போட்டி முழுமையாக நடப்பது சந்தேகம் தான்.