India vs New Zealand : Sports News, World Cup 2019, Latest Sports News, World Cup Match | Virat kholi | Rohit Sharma | MS.Dhoni

India vs New Zealand :

டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் இன்று பிற்பகல் 3.00 மணிக்கு தொடங்கும் லீக் ஆட்டத்தில், இந்தியா – நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சையில் இறங்க உள்ளன.

நியூசிலாந்து அணி 3 லீக் ஆட்டத்தில் 3 வெற்றியுடன் 6 புள்ளிகள் பெற்று முதலிடம் வகிக்கிறது. அந்த அணியின் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு பலம் வாய்ந்ததாக் உள்ளதால்,

இந்திய அணிக்கு கடுமையான சவால் நிறைந்த போட்டியாக இது இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளதும் நியூசி., எனவே மிகுந்த நம்பிக்கையுடன் அந்த அணி களம் இறங்கும்.

மேலும் கேப்டன் கேன் வில்லியம்சன், ராஸ் டெய்லர், கப்தில், நிகோல்ஸ் ஆகியோர் நல்ல பார்மில் உள்ளனர்.

மும்பையில் புது வீடு வாங்கிய டாப்சி – வீட்டோட விலையை கேட்டா ஷாக்காகிடுவீங்க!

அதே சமயம், பலம் வாய்ந்த தென் ஆப்ரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளை அடுத்தடுத்து வீழ்த்தியதால் இந்திய வீரர்களும் மிகுந்த உற்சாகத்துடன் உள்ளனர்.

எனினும், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சதம் விளாசி அசத்திய தொடக்க வீரர் ஷிகர் தவான், காயம் காரணமாக ஓய்வெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது இந்திய அணிக்கு சற்று பின்னடைவை கொடுத்துள்ளது.

அவருக்கு பதிலாக கே.எல்.ராகுல் தொடக்க வீரராக களமிறங்க உள்ளார். 4வது இடத்தில் தினேஷ் கார்த்திக் அல்லது ஆல் ரவுண்டர் விஜய் ஷங்கர் களமிறக்கப்படலாம்.

ஜஸ்பிரித் பூம்ரா, புவனேஷ்வர் வேகமும், மணிக்கட்டு சுழற்பந்துவீச்சாளர்கள் குல்தீப் – சாஹல் கூட்டணியும் நியூசி.

பேட்ஸ்மேன்களுக்கு சவாலாக இருக்கும். வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்பதால், பந்து ஸ்விங் ஆகும் வாய்ப்பு அதிகம்.

இதனால் டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரு அணிகளுமே வெற்றிக்காக வரிந்துகட்டுவதால் ஆட்டத்தில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.