India vs Australia
India vs Australia

India vs Australia – இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி வரும் 6-ஆம் தேதி தொடங்க இருக்கிறது.

2014-ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் 3 போட்டிகளில் 12 விக்கெட் எடுத்து அசத்தினார்.

இதை குறித்து ஆஸ், அணியின் ஹெட் கூறியது : இந்திய அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் ஆஸ்திரேலிய “லெவன்” அணி சார்பில் ஹாரி நெயில்சன் பங்கேற்றார்.

மேலும் அதில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினின் பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொண்டு 100 ரன்கள் எடுத்தார்.

மற்றும் இவர் உள்ளூர் போட்டிகளில் தெற்கு ஆஸ்., அணிக்காக என்னுடன் விளையாடி வருகின்றார்.

அஸ்வினின் பந்துகளை எப்படி எதிர்கொள்ளவது என்ற நுணுக்கத்தை ஹாரியிடம் கேட்டு தெரிந்து கொள்வேன்.

இந்தியாவின் நடந்த ஐ.பி.எல். தொடரில் பெங்களூர் அணியில் விளையாடிய போது அஸ்வின் பந்து வீச்சை எதிர்கொண்டு உள்ளேன்.

ஆனால் டெஸ்ட் போட்டியில் அந்த மாதிரி அனுபவம் இல்லை. அஸ்வின் மட்டும் இல்லாமல் ஜடேஜாவும் சிறப்பாக பந்து வீசுவார். இம்முறை போட்டி கடுமையாகதான் இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.

மற்றும், இந்த போட்டி தொடரில் வெறும் வார்த்தை மோதல் இல்லாமல் செயல் மோதல் மட்டுமே தாக்குதல் இருக்கும் . என்று கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here