India vs Australia 2nd T20
India vs Australia 2nd T20

India vs Australia 2nd T20 – இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே இன்று இரண்டாவது டி-20 போட்டி நடக்க இருக்கின்றது.

இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

முதல் போட்டியில் 4 ரன்கள் வித்யாசத்தில் தோல்வியை தழுவிய இந்திய அணி இந்த போட்டியில் சற்று சுதாரித்து கொண்டு விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

முதல் போட்டியில் தவான் நம்பிக்கை அளித்திருந்தார்.

அந்த நம்பிக்கை இந்த போட்டியிலும் தொடரும் என்றும், ரோகித் தனது திறமையை வெளிக்காட்டுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. இவர்களுடன் இந்திய அணியின் கேப்டன் கோலி பொறுப்பான ஆட்டத்தை வெளிக்காட்டுவார் என்று நம்பப்படுகின்றது.

மேலும் மிடில்-ஆர்டரில் விளையாட வரும் வீரர்களுக்கு சற்று கூடுதல் பொறுப்பே இருக்கின்றது என்றே கூற வேண்டும். ஆனால் அந்த பொறுப்பை சரியா புரிந்து கொள்ளாமல் ராகுல் விளையாடி வருகின்றாரோ என்ற சந்தேகம் எழுந்து உள்ளது.

ஏனெனில் கடந்த மூன்று போட்டிகளில் ராகுல் 30 ரன்களை தாண்டாவில்லை. இருந்தும் இந்த போட்டியில் இடம் பெற்றுள்ளார்.

மேலும் இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் தங்களின் பொறுப்பை சரியாக செய்தால் வெற்றி கண்டிப்பாக இந்திய அணிக்கு என்பதில் சந்தேகம் இல்லை.

இருந்தும் ஆஸ்,. அணி சற்று மாற்றதுடன் களமிறங்க இருக்கின்றது. எப்படி இருந்தாலும் ஆஸ்., அணியை எதிர் கொள்வது சற்றே கடினமானதாக இருந்தாலும் முடியாத காரியம் இல்லை.

இன்றைய போட்டி நடக்கும் மெல்போர்னில் வானம் மேக மூட்டமாக காணப்படுவதால் மழைக்கு அதிக வாய்ப்பு உள்ள நிலையில் போட்டியில் பாதிப்பு ஏற்படலாம் என்றும் கூறப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here