India Team
India Team

India Team – நடந்து முடிந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் 72 ஆண்டுகால எதிர்பார்ப்பு நிறைவடைந்து உள்ளது.

72 ஆண்டுகளில் முதல் முறையாக இந்திய அணி ஆஸ்திரேலியாவில் பெற்ற வரலாற்று வெற்றிக்கு டிவிட்டரில் மற்றும் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

பிரதமரின் வாழ்த்து : ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று உள்ளோம். கடுமையாக உழைத்து, மகிழ்ச்சியான வெற்றியை பெற்ற இந்திய அணிக்கு எனது வாழ்த்துக்கள்.

இந்த தொடர் மறக்க முடியாத ஆட்டம் மற்றும் அணி ஒற்றுமையின் வெளிப்பாடு. இனி வரும் போட்டிக்கும் எனது வாழ்த்துகள்.

கோலியின் பதிவு : “இந்த வெற்றிகரமான அணியில் ஒருவனாக இருப்பது பெருமை கொள்ள வைக்கிறது.

இப்போதும், மற்றும் எப்போதும் இது வெறும் அணி மட்டும் அல்ல இது ஒரு குடும்பம்” என்று பதிவிட்டு இருந்தார்.

சச்சின் அவர்களின் பதிவு : “இந்திய கிரிக்கெட் கொண்டாட்டமான நாள். போட்டியில் திறன் மற்றும் தீர்க்கமான செயல்பாடு அணி வெற்றி பெற காரணமாக இருந்து உள்ளது. உங்களை நினைத்து பெருமிதம் கொள்கிறேன்.