India Team Wins
India Team Wins

India Team Wins – கோலி மற்றும் சர்மா தலைமையிலான இந்திய அணி சென்ற நான்கு மாதத்தில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மண்ணில் 4 கோப்பைகள் வெற்றி பெற்று புதிய வரலாறு படைத்துள்ளது.

இந்த போட்டி தொடர் இந்திய அணிக்கு மறக்க முடியாத தொடர்களாக அமைந்தது .

பயிற்சியாளர் ரவி சாஸ்திரி முன்பே ‘அடுத்த 15 மாதத்தில் இந்திய அணி சிறப்பானதாக மாறிவிடும்,’ என தெரிவித்தார்.

இருந்தும் அவர் கூறியதற்கு மாறாக தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து மண்ணில் கோலி சிறப்பாக செயல்பட்ட போதும் இந்தியா தோல்வியடைய விமர்சனங்கள் அதிகமாக எழுந்தது.

பின் பெரும் எதிர்பார்ப்புடன் ஆஸ்திரேலியா சென்றது இந்தியா. இங்கு’ டி-20′ தொடரில் இரு அணிகளும் 1-1 என போட்டியில் சம நிலையில் இருந்தன எனவே கோப்பையை பகிர்ந்து கொண்டனர்.

டெஸ்ட் தொடரில் இம்முறை கோலிக்கு கைகொடுத்தார் புஜாரா.

மெல்போர்ன் டெஸ்டி போட்டியில் இவர் எடுத்த 106 ரன்கள் தான் இந்தியா தொடரில் ஆதிக்கம் செலுத்த பெரும் உதவியாக இருந்தது.

தவிர மயங்க் அகர்வால், விஹாரி ஜோடியின் சிறப்பான துவக்கம், பவுலிங்கில் பும்ரா, முகமது ஷமி, இஷாந்த் சர்மா ‘வேகம்’, குல்தீப், ஜடேஜாவின் ‘சுழல்’ என எல்லாம் சேர்ந்து கொள்ள ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடர் வென்ற முதல் ஆசிய அணியானது இந்தியா.

வெற்றியை தொடர்ந்து மீண்டும் மிரட்டிய இந்தியா, ஆஸ்திரேலியாவில் 2-1, நியூசிலாந்தில் 4-1 என இரண்டு ஒருநாள் தொடர்களையும் கைப்பற்றியது.

உலக கோப்பை தொடர் வரவுள்ள நிலையில் தோனி இன்னும் நம்பிக்கையான பேட்ஸ்மேன் தானா, குல்தீப், சகால் கூட்டணி துருப்பு சீட்டாக இருப்பார்களா, பேட்டிங் ஆர்டரில் 3, 4, 5, 6 அல்லது 7 வது இடத்தில் யார் யாரை களமிறக்கலாம், இக்கட்டான நிலையில் இருந்த இந்திய அணிக்கு தற்போது தெளிவு வந்து உள்ளது.

மற்றும் தோனியை பொறுத்தவரையில் உலகின் சிறந்த விக்கெட் கீப்பராக உள்ளார். அணியின் பீல்டிங் கேப்டனாக செயல்படுகிறார்.

இக்கட்டான நேரங்களில் ஆலோசனை தருகிறார். சுழற்பந்து வீச்சாளர்களுக்கு இவரது ‘ஐடியா’ பெரிதும் கைகொடுக்கிறது.

பேட்டிங்கில் ஆஸ்திரேலியாவில் ‘ஹாட்ரிக்’ அரைசதம் அடித்த தோனி, உலக கோப்பையில் எந்த இடத்தில் களமிறங்குவார் என்பது தான் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.

கோலி 4வது இடத்தில் வர விரும்புவதால் தோனிக்கு 5வது இடம் கிடைக்கலாம் எனத் தெரிகிறது.

கேதர் ஜாதவ், அம்பதி ராயுடு, ஹர்திக் பாண்ட்யா, தினேஷ் கார்த்திக் உள்ளிட்டோரும் கடந்த இரு தொடர்களில் சிறப்பாக செயல்பட்டுள்ளனர்.

நியூசிலாந்தில் ‘டி-20’ தொடரை 1-2 என இழந்த போதும் ஒட்டுமொத்தமாக ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மண்ணில் எதிர்பார்த்ததை விட சிறப்பாக இந்திய அணி செயல்பட்டது.

இது தொடரும் பட்சத்தில் இந்திய நிச்சயம் சிறப்பான அணியாக தொடர்ந்து நிலைக்கும் என்பதை மறுக்க முடியாது.