India Sports 2018
India Sports 2018

India Sports 2018 – இந்தியா விளையாட்டு துறையில் தனக்கான தனித்துவமான இடத்தை பதித்து உள்ளது.

மற்ற ஆண்டுகளை ஒப்பிடிகையில் 2018-ஆம் ஆண்டு விளையாட்டு துறையில் இந்தியா சர்வதேச அளவில் அதிக பதக்கம் வென்று இருக்கிறது.

அனைத்து விதமான போட்டிகளிலும் இந்திய வீரர்கள் விளையாடி வெற்றி பெற்று உள்ளனர். கிரிக்கெட், தடகளம், துப்பாக்கி சுடுதல், பாட்மிண்டன், டென்னிஸ், மல்யுத்தம்,

ஹாக்கி மற்றும் குத்துசண்டை என பல்வேறு பிரிவிகளில் ஆண்கள் மற்றும் பெண்கள் என எல்லா பிரிவிலும் இந்தியா பதக்கம் பெற்று உள்ளது.

பொதுவாக, ஆசிய கோப்பைகளில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த இந்தியா இந்த ஆண்டு மற்ற சர்வதேச போட்டிகளிலும் கலந்து கொண்டு பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை தேடி தந்து உள்ளனர் இந்திய வீரர்கள்.

குறிப்பிடும் வகையில், தடகளத்தில் நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதலில் தங்கம் வென்றார் மற்றும் ஹிமா தாஸ் 200, 300மீ ஓட்டத்தில் எதிர்காலத்தில் பிரகாசமான வாய்ப்பு உள்ளது.

மேலும், துப்பாக்கி சுடுதலில் யூத் ஒலிம்பில் போட்டியில் 16 வயது கொண்ட மானு பாக்கர் ஜூனியர் மற்றும் உலக துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கம் வென்றார்.

மற்றும் பாட்மிண்டன் போட்டியில் சென் ஆசிய ஜூனியர் சாம்பியன் போட்டியில் வெள்ளி வென்றார்.

அதோடு, மகளிர் ஒற்றையர் பிரிவில் இளம் வீராங்கனை பி.வி.சிந்து நடந்து முடிந்த வேர்ல்டு டூர் பைனல்ஸ் போட்டியில் தங்கம் வெற்றார்.

கிரிக்கெட் பொறுத்த வரை, இந்திய இளம் வீரர் பிரித்வி ஷா சிறப்பான ஃபார்மில் உள்ளார். மே.தீ, அணிக்கு எதிரான போட்டியில் சதம் அடித்து உள்ளார். இவருக்கு இந்திய கிரிக்கெட் அணியில் மிக பெரிய எதிர்காலம் உள்ளது.

அதே போல மகளிர் கிரிக்கெடில், ஹர்மன் ப்ரீத் கௌர் மற்றும் ஜெமிமா ஆகியோர் சிறப்பாக விளையாடி வருகின்றனர்.

குத்துசண்டை பொறுத்த வரை, மூத்த வீராங்கனையான மேரிக்கோம் 6 தங்கம் வென்று உலக சாதனை படைதுள்ளார்.

2018-ஆம் ஆண்டை பொறுத்த வரை, இந்தியா காமன் வேல்த் போட்டி மற்றும் ஆசிய போட்டிகளில் அதிகப்படியான தங்கம், வெள்ளி வென்று தனி சிறப்பு மிக்க ஆண்டாக மாற்றினார்கள் இந்திய வீரர் மற்றும் வீராங்கனைகள்.