India-Russia in Olympic Qualifying Round : Sports News, World Cup 2019, Latest Sports News, India, Sports, Latest Sports News

India-Russia in Olympic Qualifying Round :

டோக்கியோ ஒலிம்பிக் (2020) ஹாக்கி போட்டிக்கான தகுதிச் சுற்றில் இந்திய ஆண்கள் அணி, ரஷ்யாவை சந்திக்கிறது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், அடுத்த ஆண்டு ஒலிம்பிக் போட்டி நடக்கவுள்ளது. இதில் இடம் பெற்றுள்ள ஹாக்கி விளையாட்டுக்கான ஆண்கள் பிரிவில் ஜப்பான், ஆஸ்திரேலியா, பெல்ஜியம், தென் ஆப்ரிக்கா, அர்ஜென்டினா அணிகள் தகுதி பெற்றன. பெண்கள் பிரிவில் ஜப்பான், அர்ஜென்டினா, நெதர்லாந்து, தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து அணிகள் தகுதி பெற்றன.

ஆண்கள், பெண்கள் பிரிவில் மீதமுள்ள தலா 7 இடங்களுக்கு வரும் அக். 25 முதல் நவ. 3 வரை உலகின் பல்வேறு பகுதிகளில் கடைசி கட்ட தகுதிச் சுற்று நடக்கிறது.

இதற்கான அட்டவணை வெளியானது. ஆண்கள் பிரிவில் உலகின் ‘நம்பர்-5’ இந்திய அணி, 22வது இடத்தில் உள்ள ரஷ்யாவை வரும் நவ. 1, 2ல் புவனேஸ்வரில் சந்திக்கிறது.

இந்த ஆண்டு புவனேஸ்வரில் நடந்த ஹாக்கி சீரிஸ் பைனல்ஸ் தொடரில் இந்திய அணி 10-0 என, ரஷ்யாவை வென்றது. எனவே இப்போட்டியிலும் வெற்றி பெற்று இந்திய அணி, ஒலிம்பிக்கில் விளையாட தகுதி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெண்கள் பிரிவில் உலகின் ‘நம்பர்-9’ இந்திய அணி, 13வது இடத்தில் உள்ள அமெரிக்காவை வரும் நவ. 1, 2ல் புவனேஸ்வரில் எதிர்கொள்கிறது.

கடந்த ஆண்டு லண்டனில் நடந்த உலக கோப்பை போட்டியில் இந்தியா, அமெரிக்க அணிகள் மோதிய போட்டி 1-1 என, ‘டிரா’ ஆனது. சமீபகாலமாக சிறப்பாக விளையாடி வரும் ராணி ராம்பால் தலைமையிலான இந்திய அணி அசத்தும் பட்சத்தில் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறலாம்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.