India next record
India next record

India next record – நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் டி-20 தொடரில் பங்கேற்பதற்காக கோலி தலைமையிலான இந்திய அணி ஆக்லாந்து வந்தனர்.

ஆஸ்திரேலியா சென்ற விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரை 1-1 என சமன் செய்தது. அடுத்து விளையாடிய டெஸ்ட் தொடரை 2-1 என்று கைப்பற்றியது.

மேலும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரையும் 2-1 என கைபற்றி புதிய வரலாற்று சாதனை படைத்தது இந்திய அணி.

இதனை தொடர்ந்து இந்திய அணி நியூசிலாந்து மண்ணில் 5 ஒருநாள் மற்றும் 3 “டி-20” போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கவுள்ளது.

முதல் ஒருநாள் போட்டி நாளை மறுநாள் நடக்க இருக்கிறது. மற்ற போட்டிகள் மவுண்ட் மவுங்கனுகில் 26 மற்றும் 28-ஆம் தேதியிலும்,

ஹாமில்டனில் 31-ஆம் தேதியும், வெலிங்டன் நகரில் பிப்-3-ஆம் தேதி நடக்க உள்ளது.

இந்த போட்டிகளில் கலந்துகொள்ள இந்திய அணி ஆக்லாந்து சென்றடைந்தனர். ஆக்லாந்து சென்ற இந்திய வீரர்களை அங்கு இருந்த ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இந்திய அணி கேப்டன் கோலி தனது மனைவியுடன் வந்த போது ரசிகர்கள் பெருத்த சத்தம் எழுப்பினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here