
Womens Cricket : பெண்கள் உலக கோப்பை போட்டியில் இந்திய அணி 3-வது வெற்றியை நோக்கி நேற்று தனது ஆட்டத்தை தொடங்கியது.
டாஸ் வென்ற அயர்லாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்திய தொடக்க ஜோடியாக மிதாலி மற்றும் ஸ்மிருதி களமிறங்கினர். பொறுப்பாக இருவரும் விளையாடினர்.
9 ஓவர் முடிவில் ஸ்மிருதி 33 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். மற்றும் அதற்கு பிறகு களம் இறங்கிய ஜெமிமா, ஹர்மன்ப்ரீத் கௌர் 7 ரன், வேதா கிருஷ்ணமூர்த்தி 9ரன் என சொற்ப ரன்களில் வெளியிரினர்.
இந்திய அணி 17 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழந்து 127 ரன்கள் எடுத்து இருந்தது. மிதாலி ராஜ் 51 ரன்கள் எடுத்து 18-வது ஓவரில் வெளியேறினார்.
இறுதியில் 20 ஓவர் முடிவில் 145 ரன்கள் எடுத்திருந்தது.
146 என்ற இலைக்கை வைத்து களமிறகிய அயர்லாந்து அணி 20 ஓவர் முடிவில் 93 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.
இந்திய அணியின் பந்து வீச்சில் அயர்லாந்து அணி தனது 8 விக்கெட் கொடுத்து ஆட்டத்தை இழந்தது.
இறுதியில் இந்திய அணி 52 ரன்கள் வித்யாசதில் தனது 3-வது வெற்றியை அடைந்தது மட்டும் இல்லாமல் அரை இறுதிக்கு நுழைந்தது.