India lost
India lost

India lost – ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 20 ஓவர் தொடரை ஆஸ்திரேலியா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இதுவரை நடந்த 3 ஆட்டத்தின் முடிவில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில், இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4-வது ஒருநாள் போட்டி மொகாலியில் நேற்று நடைபெற்றது.

டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும், ஷிகர் தவானும் களமிறங்கினர்.

அடுத்து இறங்கிய கே.எல்.ராகுல் தவானுக்கு ஒத்துழைப்பு அளித்தார். ஷிகர் தவான் அதிரடியாக ஆடி சதம் கடந்தார்.

சிறப்பாக ஆடிய ஷிகர் தவான் 115 பந்துகளில் 3 சிக்சர், 18 பவுண்டரியுடன் 143 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அவரை தொடர்ந்து கே.எல்.ராகுல் 26 ரன்னிலும், விராட் கோலி 7 ரன்னிலும், ரிஷப் பந்த் 36 ரன்னிலும் விஜய்சங்கர் 26 ரன்னிலும் அவுட்டாகினர்.

இறுதியில், இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 358 ரன்கள் எடுத்துள்ளது.

ஆஸ்திரேலியா சார்பில் பாட் கம்மின்ஸ் 5 விக்கெட்டும், ரிச்சர்ட்சன் 3 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து, 359 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களமிறங்கியது.

நிதானமாக தொடங்கி ஆஸ்., அணி வெற்றி இலக்கை எளிதில் எட்டியது. தொடக்கம் சிறப்பாக இருந்தாலும் கடைசி ஓவர் இந்திய அணிக்கு சிறப்பாக இல்லை.

இந்திய அணியின் வீரர்கள் கைக்கு வந்த பந்தை கூட பிடிக்காமல் விட்டு விட்டனர். இந்த நிலையில் ஆஸ்., அணி 5 விக்கெட் மட்டுமே இழந்து வெற்றி பெற்றது.