India lost World Cup Hockey
India lost World Cup Hockey

India lost World Cup Hockey – உலக கோப்பை ஹாக்கியில் இன்று நடைபெற்ற காலிறுதி போட்டியில் நெதர்லாந்து அணியிடம் 2-1 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது.

இந்த தோல்வியை தொடர்ந்து இந்திய அணி தொடரில் இருந்து வெளியேறியது.

14-வது உலக கோப்பை ஆண்கள் ஹாக்கி போட்டி ஒடிசா மாநிலத்தில் தலைநகர் புவனேஸ்வரத்தில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் லீக் போட்டிகள் முடிந்து காலிறுதி போட்டிகள் நேற்று தொடங்கினார்.

இன்று நடைபெற்ற காலிறுதி இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின, ஆட்டத்தின் தொடக்கத்திலேயே 12-வது நிமிடத்தில் இந்திய வீரர் ஆகாஷ்தீப் முதல் கோல் அடித்து முன்னிலை வகிக்க உதவினர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில், நெதர்லாந்து வீரர் தெய்ரி பிரின்மேன் 19-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.

இதனால் இரு அணிகளும் 1-1 என சமனிலையில் இருந்தது.

ஆட்டத்தின் இரண்டாம் பாதியில் நெதர்லாந்து வீரர் மிங்க் வான் டான் வெய்ர்டன் 50வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். இதனால் நெதர்லாந்து அணி 2-1 என முன்னிலை பெற்றது.

அதன் பின் ஆட்டம் இறுதி வரை இந்திய அணி கோல் அடிக்க முயற்சி செய்து எந்த கோலும் அடிக்காமல் தொடரை இழந்தது.

இந்த வெற்றியின் மூலம் நெதர்லாந்து அணி அரையிறுதியில் நுழைந்தது.