Top 5 Motion Posters

Top 5 Motion Posters : இந்திய அளவில் விஸ்வாசம் படத்தின் மோஷன் போஸ்டர் சாதனை படைத்து டாப் 5 லிஸ்டில் முதலிடத்தை பிடித்துள்ளது.

தல அஜித் நடித்துள்ள விஸ்வாசம் படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. சிறுத்தை சிவா இயக்கியுள்ள இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. டி.இமான் இசையமைத்துள்ளார்.

மேலும் இப்படத்தில் நயன்தாரா நாயகியாக நடிக்க தம்பி ராமையா, விவேக், யோகி பாபு, ரோபோ ஷங்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் மோஷன் போஸ்டர் எந்தவித அறிவிப்பும் இல்லாமல் நேற்றிரவு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

யூ ட்யூபிலும் ட்ரெண்டிங்கிலும் முதலிடத்தை பிடித்து இந்திய அளவில் அதிக லைக்ஸ்களை வாங்கிய பெற்ற மோஷன் போஸ்டர் லிஸ்டில் முதலிடத்தை பிடித்துள்ளது.

இதோ அந்த டாப் 5 மோஷன் போஸ்டர் லிஸ்ட் :

1. விஸ்வாசம் – 277K

2. பேட்ட – 143K

3. TOH – 124K

4. சாமி ஸ்கொயர் – 101K

5. சயீரா நரசிம்ம ரெட்டி – 84K

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.