ஆசியன் சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் ஓமன் நாட்டின் சுல்தான் கபோஸ் விளையாட்டு வளாகத்தில் நடைப்பெறுகிறது.
இதில் இந்தியா, மலேசியா, பாகிஸ்தான் ,தென்கொரியா , ஜப்பான், ஓமன் என 6 நாடுகள் கலந்துக் கொள்கின்றன.
இதில் முதல் போட்டியில் மலேசியா-ஜப்பான் அணிகள் மோதின, இதில் மலேசியா வென்றது.
இரண்டாவது போட்டியாக இந்தியா மற்றும் ஓமன் அணிகள் மோதினர். இப்போட்டியில் இந்திய அணி 11 கோல் அடித்து வெற்றி பெற்றது.
இத்தொடரில் முக்கியமான விஷயம், எதிர் அணி ஒரு கோல் கூட அடிக்கவில்லை என்பது தான். அதிரடியான ஆட்டத்தை வெளிக்காட்டி எதிரணியை ஓட விட்டது இந்திய அணி. இறுதியில் இந்திய அணி 11-0 புள்ளிகள் எடுத்து இந்திய அணி வெற்றி பெற்றது.