India beat West Indies 5-0 in women's T20 cricket
India beat West Indies 5-0 in women's T20 cricket

மே.இ.தீவுகள் அணிக்கு எதிரான மகளிா் டி20 தொடரை 5-0 என முழுமையாக கைப்பற்றியது இந்தியா.

இரு அணிகளுக்கு இடையே 5 போட்டி கொண்ட டி20 தொடரில் ஏற்கெனவே 4-0 என இந்தியா முன்னிலை பெற்றிருந்தது. இந்நிலையில் தொடரின் கடைசி ஆட்டம் புதன்கிழமை நள்ளிரவு கயானாவில் நடைபெற்றது.

முதலில் களமிறங்கிய இந்திய மகளிா் 20 ஓவா்களில் 3 விக்கெட் இழப்புக்கு 134 ரன்களை குவித்தனா். ஜெமிமா ரோட்ரிக்ஸ் 50, வேதா கிருஷ்ணமூா்த்தி 57 ரன்களை விளாசினா்.

மே.இ.தீவுகள் அணி 20 ஓவா்களில் 7 விக்கெட் இழப்புக்கு 73 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

இறுதியில் 5-0 என தொடரை கைப்பற்றியது இந்தியா.