Indhuja
பிகில் படத்தை ட்ரோல் செய்தவர்களுக்கும் செய்பவர்களுக்கு இந்துஜா சரியான பதிலடி கொடுத்து பேசியுள்ளார்.

தளபதி விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் வெளியான திரைப்படம் பிகில். இந்த படத்தின் நாயகியாக நயன்தாரா நடிக்க கதிர், இந்துஜா, யோகி பாபு, விவேக், ஆனந்த ராஜ், ஜாக்கி செராப் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

இந்த படத்தில் விஜய் இந்துஜாவிடம் கேக்கல கேக்கல என கூறிய காட்சியை பலரும் சமூக வளையதளங்களில் ட்ரோல் செய்து வந்தனர்.

தற்போது இது குறித்து பேட்டி ஒன்றில் பேசியுள்ளார் இந்துஜா.. பிகில் படத்தின் ஷூட்டிங்கில் நானே விக் வைத்து தான் நடித்தேன்.

அங்கேயே என்னை கலாய்த்தார்கள் ஆனால் நான் அதையெல்லாம் ஜாலியாக எடுத்து கொண்டேன்.

என்னை பற்றி மீம்ஸ்களையும் நான் ஜாலியாக தான் பார்க்கிறேன், யார் எவ்வளவு கலாய்த்தாலும் அதெல்லாம் படத்திற்கு அவர்கள் செய்யும் ப்ரோமோஷன் தான் என கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.