
Indhonesia Plane : இந்தோனேஷியா விமானம் ஒன்று பயணிகளுடன் சென்ற போது மாயமானது. பின்பு, விமானம் விபத்துக்குள்ளானது தெரியவந்தது.
இதில் லயன்ஏர் விமானத்தின் விமானியுடன் சேர்ந்து மொத்தம் 189 பேர் உயிரிழந்துள்ளனர். விமானத்தை இயக்கிய இந்திய விமானி கடைசி நிமிடம் வரை பயணிகளை காப்பாற்ற முயன்றுள்ளார்.
இந்தோனேஷியாவின் ஜகார்த்தா நகரில் உள்ள விமான நிலையத்தில் இருந்து லயன் ஏர் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் நேற்று காலை 6.30 க்கு வழக்கம் போல் புறப்பட்டது.
இவ்விமானத்தில் பயணிகள், ஊழியர்கள், விமானி உட்பட 189 பேர் பயணம் செய்தனர், மேலும், விமானத்தில் ஒரு குழந்தை மற்றும் ஒரு பச்சிளம் குழந்தை இருந்தனர்.
விமானத்தை இந்தியாவை சேர்ந்த விமானி பாவ்யே சுனேஜா இயக்கினார். விமானம் புறப்பட்ட 10 நிமிடத்தில், விமான நிலைய கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது.
இதனால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர் மேலும், விமானத்திற்கு என்ன ஆனது என யாருக்கும் தெரியவில்லை.
கடற்படையினர், மீட்பு குழுவினரின் தேடுதலுக்கு பிறகு, மேற்கு ஜாவா தீவு பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கி விழுந்தது தெரியவந்தது. இந்நிலையில், பயணிகள் யாரேனும் உயிருடன் இருக்கிறார்களா என்று தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கடைசியாக விமானி சுநேஜா கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு பேசியதாவது, ” விமானத்தில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்க முயற்சிக்கிறேன்” இவ்வாறு கூறினார்.
இது தான் அவருடைய கடைசி பேச்சாகும். இவரும் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார். எதனால் விமானம் விபத்துக்குள்ளானது என விசாரணை நடைபெற்று வருகிறது.