Ind Vs WI Match Players

Ind Vs WI Match Players :

சென்னையில் வரும் 11-ம் தேதி நடைபெறவுள்ள மே.தீ ., அணிகளுக்கு எதிரான 3-வது டி -20 போட்டியில் 3 முக்கிய வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணி மே.தீ ., எதிரான ஒருநாள் போட்டியில் 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றதை தொடர்ந்து நாளை 3-வது போட்டி நடக்க இருக்கின்றது.

அந்த போட்டியில் பங்கு பெரும் இந்திய அணியில் சில மாற்றங்கள் செய்துள்ளது இந்திய கிரிக்கெட் நிர்வாகம்.

அதனை குறித்து நிர்வாக செயல் தலைவர் கூறியது:-

நவம்பர் 21-ம் தேதி தொடங்கும் ஆஸ், தொடருக்கு இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்படும் வகையில் , வேக பத்து வீச்சாளர்கள் பும்ரா,உமேஷ் யாதவ் மற்றும் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் ஆகியோருக்கு நாளைய போட்டியில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

இவர்களுக்கு பதிலாக கவுல் நாளை நடைபெறும் போட்டியில் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் என அவர் கூறினார் .

நடந்து முடிந்த இரு போட்டிகளிலும் குல்தீப் யாதவ் 5 விக்கெட் மற்றும் பும்ரா 3 விக்கெட் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது .

சித்தார்த் கவுல் கடந்த ஜூன் மாதம் நடந்த அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் அறிமுகமானார்.

இப்போது மீண்டும் அணியில் இடம் பிடித்துள்ளார். இந்திய அணி மே .தீ ., அணி வீரர்கள் தங்களின் பயிற்சியை இன்று தொடங்குகின்றது.

நாளைய இந்திய அணி விவரம் :

ரோகித் சர்மா(கேப்டன் ), தவான் , ராகுல், தினேஷ் கார்த்திக், மணிஷ் பாண்டே, ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பந்த், குர்னல் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், யஜீவேந்திர சாஹல், புவனேஷ்வர் குமார், கலீல் அகமது, ஹான்பாஸ் நதீம், சித்தார்த் கவுல் .

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.