Income Tax Department inquiry : Officiers coming from the airport, searched the suitcase at Elumalai | MP.ELUMALAI | india | Chennai

 Income Tax Department inquiry :

சென்னை: டெல்லியிலிருந்து சுமார் ரூ.25 லட்சம் பணத்துடன் வந்த ஆரணி தொகுதியின் அதிமுக எம்.பியிடம் நேற்றிரவு சென்னை விமான நிலையத்தில் வருமான வரித்துறை விசாரணை நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

ஆரணி தொகுதி அதிமுக எம்.பி ஏழுமலை என்பவர். இவர் நேற்றிரவு 8.10 மணிக்கு டெல்லியிலிருந்து சென்னை வரும் ஏர் இந்தியா விமானத்தில் வர இருந்தார்.

இந்நிலையில், அந்த விமானம் மாலை 5.15 மணிக்கு டெல்லியில் புறப்பட தயாராக இருந்த நேரத்தில், டெல்லி விமானநிலைய மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள் ஏழுமலை கொண்டு வந்த சூட்கேசை சோதனையிட்டனர்.

சோதனை செய்ததில், உடமையை ஸ்கேன் செய்யும் போது கட்டு் கட்டாக பணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

மீண்டும் பள்ளிக்கு செல்லும் விஜய் – வெளிவந்த சூப்பரான தளபதி 63 அப்டேட்!

இதையடுத்து, சென்னை விமானநிலைய மத்திய தொழில் பாதுகாப்பு(சிஐஎஸ்எப்) படை அதிகாரிகளுக்கு டெல்லி அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து, சென்னை சர்வதேச விமான நிலையம் வந்த எம்.பி ஏழுமலையை மடக்கி சிஐஎஸ்எப் அதிகாரிகள் மீண்டும் விசாரணை நடத்தினர்.

அப்போது ஏழுமலை அவர்கள் கூறுகையில், ‘இது எனது சொந்த பணம், தனிப்பட்ட தேவைக்காக வங்கியிலிருந்து கொண்டு வந்தேன்’ என தெரிவித்தார்.

இருப்பினும் அதை ஏற்றுக்கொள்ளாத அதிகாரிகள் வருமான வரித்துறைக்கு தகவல் கொடுத்தனர். இதை தொடர்ந்து விமான நிலையம் வந்த வருமானவரித்துறை அதிகாரிகள், ஏழுமலையிடம் இருந்த சூட்கேசை கைப்பற்றி சோதனையிட்டனர்.

அந்த சூட்கேசில் ரூ25 லட்சம் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இவ்வாறு வருமானவரித்துறை அதிகாரிகள் விமான நிலையத்தில் சோதனை செய்தது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.