24th Pulikesi

24th Pulikesi : வடிவேலு அடம் பிடிப்பதால் யோகி பாபுவை வைத்து படத்தை எடுக்கலாம் என படக்குழு தரப்பு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கர் தயாரிப்பில் சிம்பு தேவன் இயக்கத்தில் வடிவேலு நடித்திருந்த திரைப்படம் 23-ம் புலிகேசி.

யோகி பாபுவின் புது வீட்டை பார்த்தீங்களா? – ரசிகர்களை மெர்சலாக்கிய புகைப்படங்கள்.!

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் வடிவேலுவை வைத்து 24-ம் புலிகேசி என்ற பெயரில் படத்தை தொடங்கினார் சிம்பு தேவன்.

வடிவேலு மற்றும் தயாரிப்பாளர் சங்கருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையால் படம் பாதியிலேயே நின்றது. அந்த பிரச்சனை இன்று வரை ஓய்ந்தபாடில்லை.

இதனால் வடிவேலு இடத்தை யோகி பாபுவை வைத்து முடிக்கலாம் என படக்குழு தரப்பு ஆலோசித்து வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

யோகி பாபு சிறந்த காமெடி நடிகராக இருந்தாலும் இம்சை அரசனான வடிவேலுவின் இடத்தை நிரப்புவாரா என்பது நெட்டிசன்கள் மத்தியில் கேள்வி குறியாகவே உள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.