Important Update About Chithi 2 Serial

சித்தி 2 சீரியல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

Important Update About Chithi 2 Serial : தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் நிகழ்ச்சிகளில் ஒன்று சித்தி 2. இந்த சீரியலில் ராதிகா சரத்குமார் நடித்து வருகிறார்.

சமீபத்தில் ராதிகா சரத்குமார் நடிப்பை நிறுத்திவிட்டு அரசியலில் தன் கவனத்தை செலுத்த போவதாக கூறியிருந்தார்.

இதனால் சித்தி 2 நிறுத்தப்படுமா? என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுப்பப்பட்டது. இதற்கு அந்த சீரியலில் நடிக்கும் செவ்வந்தி கோமதிநாயகம் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் நேஹா பதில் அளித்துள்ளார்.

அதாவது அவர் சித்தி 2 முடிவுக்கு வரப்போவதில்லை என்றும், அவர் தேர்தல் நெருங்கி வருவதால் அதிக கவனம் செலுத்தப் போவதாகவும், குறிப்பிட்டு இருந்தார் எனவும் கூறியுள்ளார்.

இந்தச் செய்தியை கேட்ட சித்தி 2 சீரியல் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.