ரஜினிகாந்த் வீட்டில் நடந்த பேச்சுவார்த்தையில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா விவாகரத்து குறித்து முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தை நடிகர் தனுஷ் திருமணம் செய்து கொண்டார். இருவரும் கிட்டத்தட்ட 18 வருடங்கள் சேர்ந்து வாழ்ந்து வந்த நிலையில் இரண்டு பிள்ளைகள் இருக்கும் வேலையில் விவாகரத்து பெற்று பிரியப் போவதாக முடிவெடுத்தனர்.

ரஜினிகாந்த் வீட்டில் நடந்த பேச்சுவார்த்தை.. தனுஷ், ஐஸ்வர்யா விவாகரத்து விஷயத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவு.!!

இது குறித்து அறிவிப்பை இருவரும் கடந்த ஜனவரி மாதத்தில் வெளியிட்ட நிலையில் தற்போது ரஜினிகாந்த் வீட்டில் இந்த விவாகரத்து விஷயம் குறித்து பரபரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

ரஜினிகாந்த் வீட்டில் நடந்த பேச்சுவார்த்தை.. தனுஷ், ஐஸ்வர்யா விவாகரத்து விஷயத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவு.!!

இரண்டு குடும்பத்தாரும் சேர்ந்து நடத்திய இந்த பேச்சு வார்த்தையில் தற்காலிகமாக தனுஷ், ஐஸ்வர்யா விவாகரத்து விஷயத்தை கைவிட முடிவெடுத்து இருப்பதாக தெரியவந்துள்ளது. அதாவது தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா மீண்டும் ஒன்று சேர்ந்து வாழ முடிவெடுத்துள்ளனர். இந்த விஷயம் அறிந்து தனுஷ் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.