YouTube video

Important Announcement on Formers Loan : கொரோனா, புயல் மற்றும் ஜனவரி மழையால் கடும் பாதிப்புக்கு உள்ளான தமிழக விவசாயிகளின் கடன் சுமையை முற்றிலும் குறைத்திடும் விதமாக 12, 110 கோடி கூட்டறவு பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

விவசாயியான முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விவசாயிகளின் படும் துயரங்களை நான் நன்கு அறிவேன் என்று எப்போதும் தெரிவித்து வந்துள்ளார்.

அதன்படி, தற்போது கொரோனா, புரவி மற்றும் நிவர் புயல்கள், ஜனவரி மாத மழை ஆகியவற்றை கருத்தில் கொண்டு 12,110 கோடி கூட்டறவு கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக தெரிவித்துள்ளார். இதனால், 16.43 லட்சம் விவசாயிகள் பயன் பெறுவார்கள்.

நிவர் மற்றும் புரவி புயல்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இடு பொருள் நிவாரணம் அறிவித்து அதனை ஏக்கருக்கான உச்சபட்ச அளவையும் நீக்கி அறிவிப்பு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது

இரண்டாவது முறையாக விவசாய கடனை தள்ளுபடி செய்த ஒரே அரசு அ.தி.மு.க அரசு தான். இதனை அனைத்து விவசாய சங்கங்களும் பாராட்டி வரவேற்பு தெரிவித்துள்ளன.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.