Immediate relief P Chidambaram
Immediate relief P Chidambaram

Immediate relief P Chidambaram – டெல்லி: முன் ஜாமீன் வழக்கில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி முடிவெடுக்கும் வரை முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை கைது செய்ய தடை இல்லை.

இதனால் ப.சிதம்பரத்தை கைது செய்ய வாய்ப்பு உள்ளதால், பரபரப்பு நிலவிவருகிறது.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிதம்பரத்திற்கு முன்ஜாமீன் வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் நேற்று மறுப்பு தெரிவித்தது. இதையடுத்து முன் ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் சிதம்பரம் தரப்பு மேல்முறையீடு செய்தது.

பெற்ற மகளையே கடத்திய வனிதா, எந்நேரமும் கைதாக வாய்ப்பு – அதிர்ச்சி தகவல்.!

இந்நிலையில் இன்று 10.30 மணி அளவில் நீதிபதி ரமணா முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வரும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது.

இவ்வாறு எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவசர வழக்காக விசாரிப்பது தொடர்பாக, தான் முடிவு எடுக்க முடியாது என்றும், இதுதொடர்பாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் முடிவு எடுப்பார் என்றும் நீதிபதி ரமணா கூறியுள்ளார்.

ஆனால், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு அயோத்தி விவகாரம் தொடர்பான வழக்கை விசாரித்து வருகிறது.

இதன் காரணமாக, தலைமை நீதிபதி அமர்வு முன்னிலையில் ப.சிதம்பரம் வழக்கறிஞர்களால் முறையிட முடியாத சூழ்நிலை தற்போது நிலவுகிறது.

ப.சிதம்பரத்தின் செல்போன் சுவிட்ச் ஆப்.. உச்சகட்ட பரபரப்பு!

மதிய உணவு இடைவேளைக்குப் பிறகுதான் தலைமை நீதிபதி அமர்வு முன்னிலையில் சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர்கள் ஆஜராக முடியும் என்று தெரிகிறது.

எனவே இந்த இடைவெளியில் முன்னாள் அமைச்சர் சிதம்பரத்தை கைது செய்ய எந்த ஒரு தடையும் இல்லை. இதனால் உச்சகட்ட பரபரப்பு நிலவுகிறது.

மேலும் இதுவரை சிதம்பரம் எங்கே இருக்கிறார் என்பது தெரியாத நிலையில், சிபிஐ மற்றும் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் அவரை தேடி வருகின்றனர்.