IMDb வெளியிட்ட டாப் 10 மோஸ்ட் பாப்புலர் இந்தியன் மூவிஸ் லிஸ்ட் வைரலாகி வருகிறது.

தென்னிந்திய திரை உலகில் இந்த ஆண்டில் பல முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில் பல சூப்பர் ஹிட் திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதில் சில திரைப்படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட்ஐயும் கொடுத்து வசூலையும் குவித்திருந்தது.

இந்நிலையில் இந்த ஆண்டில் வெளியான பிளாக்பஸ்டர் திரைப்படங்களை IMDb மீடியா நிறுவனம் முதல் 10 பிரபலமான இந்தியத் திரைப்படங்கள் 2022 என்று வரிசைப்படுத்தி லிஸ்ட் ஒன்றை வெளியிட்டுள்ளது. அது தற்போது வைரலாகி வருகிறது. அதில் முதல் இடத்தை RRR திரைப்படம் பிடித்திருக்க அடுத்தபடியாக தி காஷ்மீர் பைல்ஸ், KGF2, விக்ரம், காந்தாரா, ராக்கெட்ரி, மேஜர், சீதா ராமம், பொன்னியின் செல்வன் 1, 777 சார்லி, ஆகிய திரைப்படங்கள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளது.