iman

சில நாட்களுக்கு முன்பு சமூக வலைத்தளங்களில் நொச்சிப்பட்டி திருமூர்த்தி என்ற மாற்றுத்திறனாளி பாடிய பாடல் வீடியோ வைரலானது.

குறிப்பாக இமான் இசையில் விஸ்வாசம் படத்தில் ‘கண்ணான கண்ணே’ பாடலை மிகவும் சிறப்பாக பாடியிருந்தார். அந்த வீடியோ வைரலாக பரவியது. இந்த வீடியோவை கண்ட இமான் அவரை தான் இசையமைக்கும் புதிய படத்தில் பாட வைப்பதாக வாக்குறுதி கொடுத்திருந்தார். அவரை நேரில் வரவழைத்தும் பேசினார். அது தொடர்பான புகைப்படங்களும் வெளியானது.

iman

இந்நிலையில், தான் கொடுத்த வாக்குறுதியை இமான் நிறைவேற்றியுள்ளார். ஜீவா நடித்துள்ள ‘சீறு’ என்கிற திரைப்படத்தில் அவரை பாட வைத்துள்ளார். இது தொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் டிவிட் செய்துள்ளார்.