ட்விட்டரில் தனுஷின் பாடலை பற்றி ரசிகர் கேட்ட கேள்விக்கு தனுஷை பாராட்டி பதிலளித்துள்ள இளையராஜாவின் வீடியோ வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் இசை ஜாம்பவானாக வாழ்ந்து கொண்டிருக்கும் கலைஞன் தான் இளையராஜா. இவர் தற்போது வெற்றிமாறன் இயக்கி வரும் ‘விடுதலை’ படத்திற்கு இசையமைத்துள்ளார். அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் நாகசைதன்யா நடிக்கும் தெலுங்கு படத்திற்கு இசையமைக்கப் போகிறார்.

இதனைத் தொடர்ந்து இளையராஜா அவர்கள் சென்னை, கோவை போன்ற இடங்களில் இசைக் கச்சேரி நடத்தியிருந்தார். அடுத்ததாக மதுரையில் இசை கச்சேரியை நடத்த இருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் வைகைப்புயல் ஆன வடிவேலுவும் கலந்து கொண்டு பல பாடல்கள் பாட இருக்கிறார். இந்நிலையில் இளையராஜா அவர்கள் ட்விட்டரில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளித்திருக்கிறார். 

அதில் ஒரு ரசிகர் ‘ராக் வித் ராஜா’ நிகழ்ச்சியில் தனுஷ் பாடிய பாடலை தனியாக வெளியிட வேண்டுமென்று கேட்டிருக்கிறார். அதற்கு இளையராஜா ஒருவர் இசையமைத்த அந்தப் பாடல் உங்கள் மனதில் நிற்கிறது என்றால் அது இசையமைத்த வரின் திறமை. ஒரு இசை உங்கள் மனதை தொடுகிறது என்றால் அது தான் உயர்ந்த கலைப்படைப்பு க்கு கிடைத்த அங்கீகாரம் என்றும் உங்கள் இதயத்தை தொட்டதற்காக தனுஷை நான் பாராட்டுகிறேன் என்று  பதிலளித்துள்ளார்.