கர்ப்பத்துக்கு காரணமான காதலரின் போட்டோவை வெளியிட்டுள்ளார் நடிகை இலியானா.

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் இலியானா. தமிழில் கேடி, நண்பன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள இவர் தெலுங்கில் எக்கச்சக்கமான படங்களில் நடித்து வந்தார்.

அதன் பிறகு பாலிவுட் படம் சென்ற இவர் இருந்த வாய்ப்புகளையும் இழந்து உடல் எடை கூடி குண்டானார். இதைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கர்ப்பமாக இருப்பதாக போட்டோ வெளியிட்டார்.

இலியானா திருமணமாகாமல் கர்ப்பமான விஷயம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன் பிறகு இவர் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை ரகசிய திருமணம் செய்து கொண்டதாகவும் தகவல் பரவியது.

இப்படியான நிலையில் வெளியான தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காதலருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். ஆனால் அந்த புகைப்படத்தில் காதலரின் முகம் தெளிவாக தெரியாத வகையில் போட்டோ போட்டு ட்விஸ்ட் வைத்துள்ளார்.

இதனால் ரசிகர்கள் பலரும் யார் அந்த காதலன் என கேள்வி எழுப்பி வருகின்றனர்.