raja

பல வருடங்களுக்கு பின் பாரதிராஜாவும் இளையராஜாவும் ஒன்றாக தோற்றமளிக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

80களில் தமிழ் சினிமாவில் கோலோச்சியது பாரதிராஜா – இளையராஜா கூட்டணிதான். மண்வாசனையோடு எடுக்கப்படும் பாரதிராஜாவின் திரைப்படங்களுக்கு இளையராஜா இசையமைத்த அனைத்து பாடல்களும் இனிமையானவை. ஒரே ஊர்காரர்களான இவர்கள் சிறு வயது முதலே நண்பர்கள் ஆவர்.

raja

ஆனால், 1992ம் ஆண்டு வெளியான நாடோடித் தென்றல் திரைப்படத்தில் ஏற்பட்ட சில மனஸ்தாபங்களால் இந்த கூட்டணி விலகியது. இருவரும் பேசிக்கொள்வதையும் தவிர்த்து வந்தனர். தற்போது 27 வருடங்கள் கழித்து இளையராஜவும், பாரதிராஜவும் ஒன்றாக ஒரே காரில் பயணிக்கும் போதும் எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.

இதைப்பார்க்கும் ரசிகர்கள் ‘இந்த கூட்டணி போல் வருமா?.. இவர்கள் திரைப்படத்தில் மீண்டும் இனைய வேண்டும்’ என கருத்து தெரிவித்து வருகின்றனர்.