Idly The most healthy food :
Idly The most healthy food :

Idly The most healthy food : ▪ நாகரிகம் என்ற பெயரில் பீட்சா, பர்கர், நூடுல்ஸ் போன்ற துரித உணவுகளை இன்றைய இளம் தலைமுறையினர் விரும்பி உண்கின்றனர்.

இது உடல்பருமன், மனஅழுத்தம், சர்க்கரை நோய், கொழுப்பு போன்ற பல பிரச்சனைகளை உருவாக்கும்.

▪ இதை தவிர்க்க நம் பாரம்பரிய உணவான இட்லியை உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும். 700 ஆண்டுகள் பழமையானது இட்லி.

▪இட்லியில் உள்ள சத்துக்கள்:
60 – 70 கலோரிகள், 2 கிராம் புரதம், 8 கிராம் கார்போஹைட்ரேட், 2 கிராம் நார்ச்சத்து, 1 மில்லி கிராம் இரும்புச்சத்து, கால்சியம், பொட்டாசியம், வைட்டமின் ஏ ஆகியன உள்ளன.

▪ தினமும் 4 இட்லி சாப்பிட்டால் 300 – 350 கலோரிகள் நம் உடலுக்குக் கிடைக்கிறது. அதுமட்டுமின்றி இட்லியுடன் சாம்பார், சட்னி சேர்த்து சாப்பிடுவதனால் அனைத்து சத்துக்களும் சரியான அளவில் நமக்குக் கிடைக்கிறது.

▪ இட்லியில் நல்ல செல்கள் அதிகமாக உள்ளதால் 12 மணிநேரம் வரைக் கெடாமல் இருக்கும்.

▪ புழுங்கல் அரிசி மற்றும் உளுந்தை மாவாக்கி நொதிக்க வைக்கும் போது அதிக அளவிலான புரதச்சத்து, வைட்டமின் உருவாக்கும்.

▪ ஆவியில் வேக வைப்பதால் கொழுப்பு நீக்கப்படும்.

▪ காலை உணவாக உண்ணும் போது அதிக புரதச்சத்து கிடைப்பதுடன் கொழுப்பு உடம்பில் சேராமல் பார்த்துக் கொள்ளும். இது உடலை இளமையாக வைத்துக் கொள்ளும்.

▪ புரதச்சத்து நாள் முழுவதும் நம் உடலுக்கு சக்தியை அளிக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here