Idly Flower :
Idly Flower :

Idly Flower :

வெட்சி பூ (இட்லி பூ )செடி.:

வெட்சி செடியின் பூ, இலைகள் அற்புதமான மருத்துவ குணங்களை கொண்டது.
1) வெள்ளைபோக்கு, உடல் சோர்வு, தோல்நோய்கள், வயிற்றுப்போக்கை நிறுத்த கூடியது.

2) நெஞ்சக சளியை கரைத்து வெளியேற்றும். ரத்தம் கலந்து சளி வெளியேறும் பிரச்னையை தீர்க்க கூடியது.

3) உடல் சூட்டை தணிக்கும். வியர்வையை தூண்ட கூடியது.

4) வெட்சி செடியின் இலைகளை அரைத்து போடும்போது தோல் நோய்கள் குணமாகும். கொப்புளங்கள், அரிப்பு, தடிப்பை சரிசெய்யும்.

5) அடிபட்ட இடத்தில் தசை நசுங்கி ரத்தநாளங்கள் சீர்கெட்டு போகும் நிலையில் மேல்பற்றாக போடும்போது புண்கள் விரைவில் ஆறிப்போகும்.

6) வெட்சி பூவை நீர் சேர்த்து கொதிக்க வைத்து பனங்கற்கண்டு கலந்து வடிகட்டி குடித்துவர காய்ச்சல் குணமாகும். உடல் அசதி சரியாகும். கழிச்சல், சீத கழிச்சல் இருக்கும்போது இதை காலை, மாலை குடித்துவர கழிச்சல் சரியாகும்.

7) வெட்சி பூ, தேங்காய் எண்ணெய். ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் எடுத்து நீர்விடாமல் அரைத்து வெட்சி பூவை சேர்த்து தைலமாக காய்ச்சவும். இதை வடிகட்டி, பூசிவர தோல்நோய்கள் குணமாகும்.

தோலில் ஏற்படும் அரிப்பு சரியாகும். தலையில் தேய்த்து குளித்துவர பொடுகை போக்கி முடிக்கு வளத்தை கொடுக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here