இதயத்தை திருடாதே நவீன் மற்றும் செய்தி வாசிப்பாளர் கண்மணி சேகர் ஆகியோர் திருமணம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

Idhayathai Thirudathey Naveen Marriage : தமிழ் சின்னத்திரையில் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் இதயத்தை திருடாதே. இந்த சீரியலில் நாயகனாக நடித்து வருபவர் நவீன்.

இவரும் செய்தி வாசிப்பாளர் கண்மணி சேகரும் காதலித்து வருவதாக ஏற்கனவே பல்வேறு தகவல்களும் புகைப்படங்களும் வெளியாகி இருந்தன. இந்த நிலையில் தற்போது இருவரும் தங்களது காதலை உறுதி செய்து திருமணம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

அதாவது வரும் ஜூன் மாதத்தில் எங்களுக்கு திருமணம் நடக்கும் என நவீன் மற்றும் கண்மணி சேகர் ஆகியோர் தெரிவித்துள்ளனர். இதனால் ரசிகர்கள் பலரும் இவர்களுக்கு வாழ்த்துக் கூறி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.