Ice Cube Health Tips | Health Tips | Beauty Tips | Daily Health Tips | Top 10 Best Health Benefits | Mineral Water Ice Cubes

Ice Cube Health Tips :

ஐஸ்கட்டிகள் நமது தொண்டைக்கு விரோதியாக இருக்கலாம். ஆனால் நம் முக அழகிற்கு நண்பனாக இருக்கின்றது. தெரிந்து கொள்வோமா!

▪ முகப்பருவால் பாதிக்கப்பட்ட இடங்களில் 10 நிமிடங்கள் ஐஸ்கட்டியை கொண்டு மசாஜ் செய்ய சருமத்தில் உள்ள எண்ணைப்பசை நீங்கி, சருமம் மிருதுவாகிறது.

▪ தலைவலி இருக்கும் சமயத்தில் தலை வலி உள்ள இடத்தில் ஐஸ் கட்டிகளைக் கொண்டு மசாஜ் செய்து வர தலைவலி குணமாகும்.

▪ தினமும் 15 நிமிடங்கள் தழும்புகள் உள்ள இடங்களில் ஐஸ்கட்டிகளை கொண்டு அழுத்தம் தருவதால், தழும்புகள் மறையும்.

▪ காட்டன் துணியில் ஐஸ்கட்டியை வைத்து, தினமும் காலையில் கண்களை சுற்றி மசாஜ் செய்து வர கண்கள் அழகாகும்.

▪ ரோஸ் வாட்டர் மற்றும் வெள்ளரிக்கயை அரைத்து செய்யப்பட்ட ஐஸ்கட்டி கொண்டு மசாஜ் செய்தால், கண்களுக்கு கீழ் உள்ள கருவளையங்கள் மறைவதை காணலாம்.

▪ வெயிலினால் ஏற்படும் முக சோர்வை போக்க ஐஸ்கட்டிகளை கொண்டு அழுத்தமாக மசாஜ் செய்ய வேண்டும். அதன் மூலம் சருமத்தில் குளிர்ச்சி பரவும். முகம் பளிச்சென்று இருக்கும்

▪ ஐஸ்கட்டிகள் மூலம் மசாஜ் செய்வதால், இரத்த ஓட்டம் அதிகரித்து முகம் சுருக்கமாவது குறைகிறது. இதனால் இளமையில் முதுமை தன்மை நீக்கப்படும்.

▪ மேக்கப் செய்வதற்கு முன்னர் ஐஸ்கட்டிகளை கொண்டு மசாஜ் செய்தால் அதிக நேரம் மேக்கப் கலையாமல் இருக்கும்.

▪ உதடுகள் மிருதுவாகவும், சிவப்பாகவும் மாற ஐஸ்கட்டிகளை தொடர்ந்து மசாஜ் செய்து வர வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here