IAMK 2 Release Date
IAMK 2 Release Date

இருட்டு அறையில் முரட்டு குத்து 2 படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

IAMK 2 Release Date : தமிழ் சினிமாவில்ஹர ஹர மஹாதேவகி என்ற பாடல் காமெடி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில் அடுத்ததாக வெளியான திரைப்படம் இருட்டு அறையில் முரட்டு குத்து.

விஜய் சேதுபதியின் இடம் பொருள் ஏவல் படத்தில் ரிலீஸ் எப்போது?? தயாரிப்பாளர் தரப்பில் இருந்து வெளியான பதில்!

கௌதம் கார்த்திக், வைபவி சாண்டில்யா, யாஷிகா ஆனந்த் ஆகியோர் இணைந்து நடித்துள்ள இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது.

அடல்ட் காமெடி படம் என்பதால் தியேட்டர்களில் இளைஞர்களின் கூட்டம் அலைமோதியது. ஆனால் இதுபோன்ற படங்கள் தமிழ் சினிமாவுக்கு தேவையா என்ற கேள்வியும் எழுந்தது.

இருப்பினும் தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. ஆனால் இப்படத்தின் நாயகனாக இயக்குனர் சந்தோஷ் பி ஜெயக்குமாரே நடித்துள்ளார்.

தற்போது கிடைத்துள்ள தகவல் என்னவென்றால் இந்த படத்தின் அனைத்து உரிமையும் ராக்ஃபோர்ட் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் கைப்பற்றி இருப்பதாக கூறப்படுகிறது.

மாஸ்டர் மரண மாஸ்.. இந்தியன்2?? – ராக்ஸ்டார் அனிருத் நடித்த அதிரடி அப்டேட் (லைவ் வீடியோ இதோ)

இதனால் ஊரடங்கு முடிந்ததும் இந்த படமும் ரிலீஸாகும் என கூறப்பட்டு வருகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் பாகத்தில் பிரபலமான இளம் நடிகரான கௌதம் கார்த்திக் நடித்து இருந்தார். ஆனால் இப்படத்தின் இயக்குனர் நடித்திருப்பதால் பழையபடி இளைஞர்கள் கூட்டம் அலைமோதும் இல்லையா என்பதையும் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.