Hussain Prepare Panjamirtham to Temple
Hussain Prepare Panjamirtham to Temple

கோவில் பூஜைக்காக தன்னுடைய கணவர் பஞ்சாமிர்தம் தயார் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார் மணிமேகலை.

Hussain Prepare Panjamirtham to Temple : தமிழ் சின்னத்திரையில் சன் மியூசிக் தொலைக்காட்சி சேனல் மூலமாக தொகுப்பாளினியாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் மணிமேகலை.

தங்களுடைய பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி இஸ்லாம் மதத்தைச் சார்ந்த உசைன் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டு தற்போது மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகிறார்.

கணவருடன் ரம்ஜான் கொண்டாட்டம்.. ரசிகர் கேட்ட கேள்விக்கு சரியான பதிலடி கொடுத்த மணிமேகலை – பரபரப்பைக் கிளப்பிய பதிவுகள்!

சமீபத்தில் இவர்கள் இருவரும் பிறந்தநாள் கொண்டாடிய நிலையில் மாறிமாறி தங்களுடைய அன்பையும் காதலையும் வெளிப்படுத்திக் கொண்டனர்.

இந்த நிலையில் தற்போது மணிமேகலை கிராமத்திற்கு சென்றிருந்தபோது அங்கு மணிமேகலை பிறந்த நாளின் போது கோவிலில் பூஜை செய்வதற்காக அவருடைய கணவர் உசைன் பஞ்சாமிர்தம் தயார் செய்துள்ளார்.

அந்த வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் மணிமேகலை. இதேபோல் சமைக்கவும் கற்றுக் கொண்டால் நான் கொஞ்சம் ஃப்ரீயா ஆகிடுவேன் என மணிமேகலை கூறியுள்ளார்.

அதற்கு உசைன் அப்ப கடைசி வரைக்கும் நீ சமைக்க மாட்ட எனக் கூற மணிமேகலையும் கூச்சமே இல்லாமல் மாட்டேன் எனக்கூறி இரண்டு குரங்கு புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளார்.

ரம்ஜான் பண்டிகையின்போது மணிமேகலை தன்னுடைய கணவருடன் சேர்ந்து கொண்டாடிய புகைப்படத்தை அவர் பதிவிட்டுள்ள போது அது சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.

பீச்சில் வைத்து கடலை போடும் விக்கி.. குலுங்கி குலுங்கி சிரிக்கும் நயன் – நானும் ரவுடிதான் சூட்டிங் ஸ்பாட் வீடியோவை வெளியிட்ட விக்னேஷ் சிவன்.!

உங்களை உசைன் வலுக்கட்டாயமாக இஸ்லாம் மதத்திற்கு மாறிவிட்டாரா என ரசிகர்கள் கேள்வி கேட்க அப்படியெல்லாம் ஒன்றுமில்லை நான் மதம் மாறவில்லை என மணிமேகலை விளக்கம் அளித்திருந்தார்.

மேலும் அவர் தன்னுடன் சேர்ந்து தீபாவளி கொண்டாடியதாகவும் கூறியிருந்தார். அதனை உண்மை என நிரூபிக்கும் வகையில் தற்போது உசைன் கோவில் பூஜைக்காக பஞ்சாமிர்தம் தயார் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.