சென்னையில் உள்ள கடையில் மனைவிக்கு செம சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார் கணவர்.

Husband Surprise to Wife in Velavan Stores : தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற கடைதான் வேலவன் ஹைப்பர் மார்க்கெட். ஆடைகள் ஆபரணங்கள் வரை வீட்டுக்குத் தேவையான அத்தனைப் பொருட்களும் ஒரே இடத்தில் கிடைக்கும் கடை என்பதால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

பிரபல கடையில் மனைவிக்கு செம சர்ப்ரைஸ் கொடுத்த கணவன் - வைரலாகும் அழகிய நடன வீடியோ

ஒரே தலத்தில், 108 சிவாலய வழிபாடு.!

இதனைத் தொடர்ந்து சென்னையில் வேலவன் ஸ்டோர்ஸ் என்ற பெயரில் ஏழு அடுக்கு தளத்துடன் கூடிய புதிய கிளை திறக்கப்பட்டது. பிரபலங்கள் பலரின் ஃபேவரைட் கடையாக இது மாறியுள்ளது. சின்னத்திரை மற்றும் வெள்ளித் திரையில் சார்ந்த பல திரைப்பிரபலங்கள் இந்த கடையில் ஷாப்பிங் செய்துள்ளனர்.

இந்த நிலையில் கொரானா காரணமாக வெளிநாட்டில் சிக்கிய ஒருவர் சென்னை வந்த போது வேலவன் ஸ்டோர்ஸ் கடையில் ஷாப்பிங் செய்ய வந்த தன்னுடைய மனைவி தீபா வாணிக்கு நடனமாடி சர்ப்ரைஸ் ஷாக் கொடுத்து 1 வருட பிரிவின் காதலை வெளிப்படுத்தியுள்ளார். இது போன்று தன்னுடைய மனைவிக்காக நடனமாட போவதாக அனுமதி கேட்க கடை நிர்வாகமும் உடனே அனுமதி கொடுத்ததாக கூறி நன்றி தெரிவித்துள்ளார் அஷ்வின் என்ற அந்த நபர்.

Seafarer Ashwin Surprise His Wife Deepa Vani | Flash Mob | First Time In Chennai | Velavan Stores HD